சுவிஸ் வங்கியில் கணக்கு வைதிருப்பர்வர்களிடம் வரி வசூலிக்க ITAT உத்தரவு!!

சுவிஸ் வங்கிக் கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருந்த நபருக்கு ரூ .196 கோடிக்கு வரி செலுத்த ஐ.டி.ஏ.டி உத்தரவிட்டுள்ளது..!

Last Updated : Jul 18, 2020, 06:20 AM IST
சுவிஸ் வங்கியில் கணக்கு வைதிருப்பர்வர்களிடம் வரி வசூலிக்க ITAT உத்தரவு!!

சுவிஸ் வங்கிக் கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருந்த நபருக்கு ரூ .196 கோடிக்கு வரி செலுத்த ஐ.டி.ஏ.டி உத்தரவிட்டுள்ளது..!

மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் சுவிஸ் வங்கியில் பதுக்கிவைத்துள்ள 196 கோடி ரூபாய்க்கு, வரி செலுத்த வேண்டும் என மும்பையை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க தீர்ப்பாக கருதப்படுகிறது. மும்பையை சேர்ந்த ரேணு டி தரணி (Renu T Tharani) என்பவர், 2006 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வருமான வரி கணக்கில்,தன் ஆண்டு வருமானம், 1.70 லட்சம் ரூபாய் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் சுவிஸ் வங்கியில் பல கோடி ரூபாய் பதுக்கிவைத்துள்ளது வருமான வரித் துறைக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 2014 ஆம் ஆண்டில் வருமான வரித்துறை மேற்கொண்ட புலனாய்வில், ரேணு சுவிட்சர்லாந்தின் HSBC வங்கியில் சுமார் 196 கோடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொகைக்கு வரி செலுத்துமாறு, வருமான வரித்துறை உத்தரவிட்டது. ஆனால், அவர் இதை எதிர்த்து மும்பை வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மனுதாரர் டி தரணி, குடும்ப டிரஸ்ட் மூலம் பயனாளி என்ற முறையில் தனக்கு பணம் வந்ததாக தெரிவித்துள்ளார். 

ஆனால், டிரஸ்டின் பயனாளி என்பதற்கு, எவ்விதமான ஆவணங்களையும் அவர் அரசிடன் வழங்கவில்லை. அவர் வழங்கிய ஒரே சான்றும், நம்பும்படி இல்லை. மேலும், டிரஸ்ட் ஏற்கனவே கலைக்கப்பட்டு விட்டது. அதனால், அந்த டிரஸ்டின் பணம் என்பதையும் ஏற்க முடியாது. அன்னை தெரசா போன்ற தொண்டுள்ள படைத்தோரின் சேவைக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் நன்கொடை வழங்குவர். ஆனால், மனுதாரர் தெரசா போல பிரபலமானவர் அல்ல. அதனால், அவருக்கு ஒரு அறக்கட்டளையில் இருந்து, பல கோடி ரூபாய் பணம் வந்ததை ஏற்க முடியாது.

READ | உஷாரார்!! Cheque Bounce விதிகளில் மாற்றம்; உங்கள் மீது சிவில் வழக்கு பாயலாம்.

அதே சமயம், கேமன் தீவில் GWU இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மூலம் தான் மனுதாரரின் சுவிஸ் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கேமன் தீவு, கணக்கில் வராத கருப்பு பணத்தை பதுக்கவும், சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்கும் பெயர் பெற்றது. எனவே, மனுதாரருக்கு சட்ட விரோதமாக பணம் வந்ததற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. அதனால், ரேணு டி தரணியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சுவிஸ் வங்கியில் உள்ள, 196.46 கோடி ரூபாய்க்கு அவர் வருமான வரி செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

சிறப்புமிக்க இந்த தீர்ப்பு, சுவிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க அல்லது வரி வசூலிக்க வழி காட்டியுள்ளது. வரி ஏய்ப்புக்கு அபராதம் ஸ்காட்லாந்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குல்வந்த் சிங் லல்லி என்பவர், 'ராஜா தந்துாரி' என்ற உணவகம் நடத்தி வந்தார். அவர், 2013-18 வரை வரி செலுத்த தவறியது தொடர்பான வழக்கில் அவருக்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், நிறுவன இயக்குனராக நீடிக்க சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

More Stories

Trending News