JDA நிலம் கையகப்படுத்துதல் குறித்து ஜெய்ப்பூர் விவசாயிகள் நூதன போராட்டம்!

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!!

Last Updated : Mar 2, 2020, 08:47 PM IST
JDA நிலம் கையகப்படுத்துதல் குறித்து ஜெய்ப்பூர் விவசாயிகள் நூதன போராட்டம்! title=

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய தொகையை வழங்கக் கோரி விவசாயிகள், கழுத்தளவு ஆழக் குழி தோண்டி அதில் அமர்ந்து  நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெய்ப்பூர் மேம்பாட்டு அமைப்பு சார்பில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சுமார் 10 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதற்காக, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சுமார் 60 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த தொகையை பெற மறுத்த விவசாயிகள் தற்போதைய சந்தை விலைக்கு ஈடான தொகையை இழப்பீடாக வழங்க கோரி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜமீன் சமாதி சத்யாகிரகம் எனும் இந்த போராட்டத்தில் நேற்று (மார்ச்-1) 5 பெண்கள் உட்பட 21 விவசாயிகள் கழுத்தளவு ஆழமான குழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 2-வது நாளான இன்று 51 விவசாயில் குழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் விவசாயி ஒருவர் கூறுகையில்... JDA-விடம் அவர்கள் ஒரு பிக்ஹாவுக்கு 1,75,00,000 ரூபாய் (நிலத்தை அளவிடும் ஒரு யூனிட்) விவசாயிகளுக்கு செலுத்த வேண்டும் என்றும் நாங்கள் போராட்டத்தை நிறுத்துவோம் என்றும் கூற விரும்புகிறோம். விவசாயிகளுக்கு சொந்தமான 1145 பிக்ஹாஸ் நிலத்தை அவர்கள் முழுமையாக எடுக்க விரும்புகிறார்கள். இது எங்கள் போராட்டத்தின் மூன்றாம் நாள். 

இது குறித்து மற்றொரு விவசாயி கைலாஷ் போஹ்ரா கூறுகையில்... "நாங்கள் எங்கள் நிலத்தை புதிய சட்டத்தின்படி மட்டுமே கொடுக்க தயாராக இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் தொடர்ந்து இப்படி எதிர்ப்பு தெரிவிப்போம். அரசாங்க அதிகாரிகளுடன் எங்கும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். "இந்த ஆண்டு JDA-க்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு ஜனவரி 1 முதல் நடந்து வருகிறது. ஆனால், கடந்த மூன்று நாட்களில், பெண்கள் உட்பட இங்குள்ள விவசாயிகள் துளைகளை தோண்டி அவற்றில் நிற்பதன் மூலம் இந்த புதிய எதிர்ப்பைக் கொண்டு வந்துள்ளனர். 

Trending News