2010-ம் ஆண்டு ஜமா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில், தில்லி நீதிமன்றம் இந்திய முஜாஹிதீன் தலைவர் யாசின் பட்கல் மற்றும் பலர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ANI அறிக்கையின்படி, போதிய சாட்சியங்கள் இல்லாததால் மூன்று குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவித்தது.
தில்லி காவல்துறை குற்றபத்திரிக்கையின்படி சையத் இஸ்மாயில் அஷெக், அப்துஸ் சவூர் மற்றும் ரியாஸ் அஹ்மத் சயீத் ஆகியோரது பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கு எதிராக போதுமான சான்றுகள் இல்லை என்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சிதார்த் சர்மா குறிப்பிட்டார்.