ஜம்மு-காஷ்மீரில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ வரை உணரப்பட்டது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இன்று காலை 11 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் அதிவுகளை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சில வினாடிகள் உணரப்பட்டது.
ஆனால் இதன் அதிர்வுகள் டெல்லி, நொய்டா, காசிதாபாத், பரிதாபாத், குர்கான் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்து இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை!
Earthquake measuring 4.5 on the Richter scale hits Jammu & Kashmir: India Meteorological Department
— ANI (@ANI) March 10, 2018