தயாரிப்பாளர், நடிகை, அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் குஷ்பூ. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார் குஷ்பூ, ஆனால் எடிட்டிங்கில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தமடைந்தேன், ஒரு கட்டத்தில் எனது கதாபாத்திரம் நகைச்சுவையாக மாற்றப்பட்டது என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் நானும் மீனாவும் கதாநாயகிகள் என்று தான் படத்தில் கமிட் செய்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் மொத்தமாக மாற்றி விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள துணிந்தவன்! ஜனவரி ரிலீஸ்!
சமீபத்திய நேர்காணலில் பேசிய குஷ்பூ அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். “அண்ணாத்த படத்தில் மீனாவும் நானும் இணைந்து நடித்தோம், நாங்கள் இருவரும் படத்தில் கதாநாயகிகள் என்று தான் ஆரம்பத்தில் தெரிவித்தனர். ரஜினிக்கு படத்தில் வேறு ஜோடி இல்லை என்றும், நாங்கள் இருவரும் தான் கடைசி வரை படத்தில் வருவோம் என்று உத்தரவாதம் செய்தனர். அதனை நம்பி தான் நடித்தேன். முதலில் எனது கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டு இருந்தது. ஆனால், படத்தில் திடீரென்று ரஜினிக்கு ஜோடியாக வேறு ஹீரோயின் கிடைத்தது. படத்திற்குள் நயன்தாரா வந்தார். அதில் இருந்து எனது கதாபாத்திரம் மாற்றப்பட்டது.
அப்போது நான் உணர்ந்தேன்... எனது கதாபாத்திரம் கேலியாக மாற்றப்பட்டது என்று. டப்பிங் செய்யும் போது படத்தைப் பார்த்த பிறகு, நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்” என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். படத்தின் பாதியில் ஏற்பட்ட இந்த மாற்றம் ரஜினிகாந்த் எடுத்த முடிவா என்ற கேள்விக்கு, "அவர் அப்படிப்பட்டவர் இல்லை. அப்படி செய்ய மாட்டார். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். சரியாக என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இயக்குனர் மாற்றினாரா அல்லது தயாரிப்பாளர் படத்தில் புது ஹீரோயின் தேவை என்று நினைத்தார்களா என்பது தெரியவில்லை. ஆரம்பத்தில் மீனாவுக்கும் எனக்கும் தனித்தனியாக ரஜினியுடன் டூயட் பாடல்கள் இருக்கும் என்று தெரிவித்தனர்" என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
ஒரு சீனியர் நடிகை இப்படி சொல்லி இருப்பது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படம் அண்ணன்-தங்கை உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் சீரியல் போல இருக்கிறது என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து இருந்தனர். மேலும் படம் பலவித எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி, பாண்டியராஜன், சத்யன் மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ