Pensioners Latest News In Tamil: முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அது சார்ந்து விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
ஓய்வூதியதாரர்களின் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
"CPENGRAMS" எனப்படும் ஓய்வூதிய மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளத்தை மத்திய அரசு சமீபத்தில் மறு ஆய்வு செய்தது.
அதன்பிறகு ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைவாகவும், திறமையாகவும் தீர்ப்பதற்கு அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
புதிய வழிகாட்டுதல் அடிப்படையில், ஓய்வூதியதாரர்களின் குறைகளை 21 நாட்களுக்குள் நிவர்த்தி செய்ய அமைச்சகங்கள் முயற்சி செய்ய வேண்டும். குறைகளை தீர்க்க அதிக நேரம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இணையதளத்தில் இடைக்கால பதில் அளிக்க வேண்டும்.
முழு அரசு அணுகுமுறை என்பதன் கீழ் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இது இந்த அலுவலகத்தில் உடன் தொடர்புடையது அல்ல எனக் கூறி குறைகளை உடனடியாக சுருக்கமாக முடிக்கக்கூடாது.
குறை தீர்க்கப்படும் நேரத்தில் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை இணைக்கப்பட வேண்டும்.
இணையதளத்தில் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் தொடர்பான குறைகளை அமைச்சகங்கள் மாதம் தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
மேலும் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரமான முறையில் தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல ஓய்வூதியம் தொடர்பான குறைகளின் போக்கை குறைதீர் அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.
குறை தீர்க்கப்பட்ட 30 நாட்களுக்குள், அதை எதிர்த்து மனுதாரர் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். அதேநேரத்தில் தொடர்புடைய ஆவணங்கள் இருந்தால் அதனுடன் இணைக்க வேண்டும்.
அமைச்சகத்தில் நேரடியாக வழங்கப்பட்ட குறைதீர்ப்பு விண்ணப்பங்களை "CPENGRAMS" எனப்படும் ஓய்வூதிய மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ