கேரள மாநிலம் கொச்சி அருகே பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா (30). இவர், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். கேரள மாநிலம் முழுவதும் இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அப்போது, மாணவி ஷிஜா கொலை வழக்கை விசாரிக்க ஏ.டி.ஜி.பி. சந்தியா தலைமையில் தனிப்படையின் பேரில், இந்த கொலையில் தொடர்புடைய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் அமீருல் இஸ்லாம் என்பவரை கைது செய்யப்பட்டார்.
மாணவி ஷிஜாவை கிண்டல் செய்ததால் அமீருல் இஸ்லாமை அவர் செருப்பால் அடித்ததாகவும், அந்த ஆத்திரத்தில் இந்த கொலையில் அமீருல் இஸ்லாம் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.இதை தொடர்ந்து அமீருல் இஸ்லாம் கைது செய்யப்பட்டு கொச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், அவர் மீதான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் அம்ருல் இஸ்லாம் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று குற்றவாளி அம்ருல் இஸ்லாம்-க்கு தூக்குத்தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Jisha murder case: Convict Ameerul Islam brought to Ernakulam chief judicial magistrate court, quantum of punishment to be announced soon. pic.twitter.com/itnRYJJwiV
— ANI (@ANI) December 14, 2017