சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம்சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கவலையை வெளியிட்டு வருகின்றன. மேலும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதற்கிடையில், நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவை சமரசமாக முடித்து வைப்பதற்காக, இந்திய பார் கவுன்சில் களம் இறங்கியுள்ளது. அதிருப்திக்குள்ளாகியுள்ள நீதிபதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. இந்த 7 பேர் அடங்கிய சமரச குழுவினர், இன்று இரவு 7.30 மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி செலமேஸ்வரை அவரது இல்லத்தில் பார் கவுன்சில் குழு சந்தித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஏனைய மூத்த நீதிபதிகளையும் பார் கவுன்சில் குழு சந்தித்து பேசதிட்டமிட்டுள்ளது.இதனிடையே, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நான்கு நீதிபதிகளையும் சந்தித்து பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக நீதிபதி குரியன் ஜோசப் கூறுகையில், இந்த விவகாரத்தில், வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. கோர்ட் நிர்வாகத்தின் மூலமே பிரச்சினை தீர்த்து கொள்ளப்படும் எனக்கூறினார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரருடன், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சந்தித்தார்.புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் வரை மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகளான சாவந்த், சந்துரு, ஏபி ஷா, சுரேஷ் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.