நீதிபதி தீபக் மிஸ்ரா: அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்!

நீதிபதி மிஸ்ரா தன் மீது 4 நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்விகள் தனது நேர்மையை சந்தேகப்படுவதைப் போன்றது என்று மனமுடைந்து தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 16, 2018, 10:55 AM IST
நீதிபதி தீபக் மிஸ்ரா: அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்! title=

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீதிபதிகள் முன் வைத்த விவாதங்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்தன. நீதிபதி அருண் மிஸ்ரா தன் மீது 4 நீதிபதிகள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்றும், நீதிபதி லோயா மரண வழக்கு விசாரணையில் சட்டப்படி என்ன தீர்ப்பு வழங்க வேண்டுமோ அதை நேர்மையாக வழங்கியதாகவும் அருண் மிஸ்ரா மனமுடைந்து தெரிவித்தார்.

4 நீதிபதிகளும் தன்னுடைய பெயரை சுட்டிக்காட்டாவிட்டாலும், அவர்கள் சுட்டிக்காட்டிய வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி என்ற முறையில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு முன்னர் கூட முன்னாள் தலைமை நீதிபதிகள் டி எஸ் தாகூர் மற்றும் ஜேஎஸ் கெஹர் உள்ளிட்டோர் கஷ்டமான வழக்குகளை ஒதுக்கிய போதும் அவ்வாறே செயல்பட்டதாகவும் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். நீ உச்சநீதிமன்றத்தில் 2,3,4 மற்றும் 5வது அமர்வு தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு வைத்த 

நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் உள்ளிட்டோர் தலைமையில் இயங்குகிறது. தலைமை நீதிபதியுடனான கூட்டம் முடிந்த பின்னர் நீதிபதிகள் வழக்கம் போல தங்கள் பணிக்குத் திரும்பினர். 

இதன் பின்னர் வழக்கறிஞர் லுத்ரா தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு உச்சநீதிமன்ற மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்ட 4 நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

Trending News