மத்திய அரசு கான்பூர் ரயில் நிலையம் மற்றும் அலகாபாத் ரயில் நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன்படி, கான்பூர் ரயில் நிலையத்துக்கு 200 கோடி ரூபாயும் அலகாபாத் ரயில் நிலையத்துக்கு 150 கோடி ரூபாயும் நிர்ணயித்துள்ளது.
ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு எடுத்துவருகிறார்.
நாட்டின் முக்கியமான 25 ரயில் நிலையங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, புனே, தானே, மும்பை, விசாகப்பட்டினம், ஹௌரா, காமகயா, அலகாபாத், போன்ற 25 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் நிலையங்கள் 30,000 கோடி ரூபாய்க்கு ஏலம் விடுவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது, கான்பூர் ரயில் நிலையத்துக்கு 200 கோடி ரூபாயும், அலகாபாத் ரயில் நிலையத்துக்கு 150 கோடிரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையங்களுக்கான ஏலம் ஜூன் 28-ம் தேதி ஆன்லைன்மூலம் நடைபெற உள்ளது. ஜூன் 30-ம் தேதி, ஏலத்தின் முடிவு அறிவிக்கப்படும்.