மக்களுக்கு சேவை செய்வதற்காக லஞ்சம் அதிகம் பெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
ஊழல் அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடம் கர்நாடகாவுக்கும், 2-வது இடம் ஆந்திராவிற்கும் கிடைத்துள்ளது. இவற்றை தொடர்ந்து தமிழகம், மகாராஷ்டிரா, காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
ஊடக ஆய்வு மையம் சார்பில் 20 மாநிலங்களில் ஊழல் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இந்த பட்டியலில் ஊழல் குறைவாக காணப்படும் மாநிலங்களின் பட்டியலில் இமாச்சல பிரதேசம், கேரளா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கடந்த ஓராண்டில் மட்டும் 53 சதவீதம் பேர், அதாவது 3 ல் ஒரு வீட்டைச் சேர்ந்தவர் அரசு திட்டங்களை பெற லஞ்சம் கொடுத்துள்ளனர்.
2017-ம் ஆண்டில் இதுவரை ரூ.6,350 கோடி லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு என்ன வழிகள் என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.