கார்த்தி சிதம்பரம் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அமலாக்கத்துறை சம்மன் விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மனு மீது இன்று விசாரணை.

Last Updated : Mar 6, 2018, 09:32 AM IST
கார்த்தி சிதம்பரம் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! title=

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய ரிட் மனு ஒன்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பாக அவருடைய வக்கீல் நேற்று தாக்கல் செய்தார். அதில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் இதுபோன்ற சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்புவதற்கு எவ்வித அதிகார வரம்பும் கிடையாது. எனவே இந்த சம்மன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறி உள்ளார்.

அப்போது, ‘ஏற்கனவே இதுதொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்களுடன் இதையும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக‘ நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு மீதும் இன்று விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News