மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கௌரவர்கள் ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் முறையின் மூலமாக பிறந்தவர்கள் என ஆந்திர பல்கலை துணை வேந்தர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கௌரவர்கள் ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் முறையின் மூலமாக பிறந்தவர்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து இந்தியாவுக்கு ஞானம் இருந்ததாகவும் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் பேசியுள்ளார்.
சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாட்டிற்கு முந்தையது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்றும் அந்தக் கூட்டத்தில் ராவ் பேசி உள்ளார். ராமர் அஸ்திரங்களை பயன்படுத்தினார். விஷ்ணு இலக்கை துரத்த சக்கர வியூக்கத்தை பயன்படுத்தினார். இவை இலக்கை தாக்கிய பின் மீண்டும் ஏவியவர்களிடமே வந்துவிடும் என்ற அவர், இலக்கை நோக்கி செலுத்தப்படும் ஏவுகணைகள் இந்தியாவிற்கு புதிதல்ல என்பதை இவை உணர்த்துகின்றன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவை நம் தேசத்தில் இருந்திருப்பது இவற்றிலிருந்து தெரிய வருகிறது என்று தெரிவித்தார். மேலும் அவர், ராவணனிடம், புஷ்பக விமானம் மட்டும் இல்லை. அவரிடம் பல்வேறு அளவு மற்றும் திறனில் 24 விதமான விமானங்கள் இருந்ததாக ராமாயணம் கூறுகிறது என்று விவரித்த அவர், ராவணனிடம் இலங்கையில் ஏராளமான விமானங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், உயிரின் தோற்றம் நீரில் தொடங்கியதாக டார்வின் கூறுகிறார். விஷ்ணுவின் முதல் அவதாரமும் நீரில்தான் தொடங்கி உள்ளது. அதாவது மச்ச அவதாரம் என்று பரிணாம கோட்பாட்டை விஷ்ணுவுடன் ஒப்பிட்டுள்ளார்.
#WATCH: GN Rao,Vice-Chancellor Andhra University at Indian Science Congress y'day in Jalandhar:How come Gandhari gave birth to 100 children?Stem cell research was done 1000 yrs ago in this country,we had 100 Kauravas from one mother because of stem cell&test tube-baby technology. pic.twitter.com/C9nlaYwB7p
— ANI (@ANI) January 5, 2019
மகாபாரதத்தை அறிவியலுடன் ஒப்பிட்டு பேசிய ராவ், காந்தாரிக்கு எப்படி நூறு பிள்ளைகள் இருக்க முடியுமென அனைவரும் வியந்தார்கள். இதனை ஒருவரும் நம்பவில்லை. ஆனால், இப்போது சோதனை குழாய் குறித்து பேசுகிறோம். மகாபாரதத்திலே இது குறித்து குறிப்பு உள்ளது. அதில் கருத்தரித்த நூறு முட்டைகள் நூறு பானைகளில் போடப்பட்டதாக உள்ளது என்று ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார். இவரது இந்த உரையாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.