கேரளா மாநிலத்தில் ஹெல்மெட் இல்லாமல் கார் ஓட்டிய நபருக்கு அம்மாநில போக்கு வரத்து காவல்துறை ரூ.100 அபராதம் விதித்துள்ளது!
கேரள மாநிலம் சாஸ்தான்கோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் கோபா குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்றிருந்த போக்குவரத்து காவலர் குமாரின் காரை நிறுத்தும்படி செய்கை செய்துள்ளனர்.
காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் கோபா குமார் தனது காரை நிறுத்தியுள்ளார். பின்னர் கோபா குமார் சாலை விதிகளை மீறி வந்ததாக கூறிய காவலர்கள், அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அபராதத்தை கட்டிய குமார் தனது வீட்டுக்கு வந்து அபராதம் கட்டிய ரசீதை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.
அந்த ரசீதில் கார் எண்ணை போட்டு, ஹெல்மெட் அணியவில்லை என்ற குற்றத்திற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்று எழுதியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குமார் இதை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அனைவருக்கும் தெரியபடுத்தியுள்ளார்.
காவலர்கள் ரசீது சீட்டில் தவறான விளக்கம் எழுதி அபராதம் வசூளிப்பது இது முதல் முறை அல்ல., பல கார்களை, இரு சக்கர வாகனங்களை பிடிக்கும் காவலர்கள் அவர்களின் குற்றத்திற்கான அபராதத்தினை வசூளிக்க தனி ஒரு இடத்தில் தான் நிற்கவேண்டியுள்ளது. பல ரசீதுகளை ஆளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் காவலர்கள் யார் என்ன குற்றம் செய்தார்கள் என மனதில் வைத்துக்கொள்ள முன்வருவதில்லை.
இதன் காரணமாகவே இதுபோன்ற தவறுகள் நிகழ்கிறது. கேபா குமார் விஷயத்தில் நடந்ததும் அவ்வாறு தான். அதிக வேகத்தில் பயணித்த கோபா குமாருக்கு அபராதம் விதித்த காவல்துறை., குழப்பத்தில் குற்றத்தினை ஹெல்மெட் அணியவில்லை என மாற்றி குறிப்பிட்டுள்ளது.