மொழி போரில் போருக்கு வித்திடுகிறது மத்திய அரசு -பினராயி!

இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள கருத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Last Updated : Sep 15, 2019, 01:21 PM IST
மொழி போரில் போருக்கு வித்திடுகிறது மத்திய அரசு -பினராயி! title=

இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள கருத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் தவறானது என பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., 

இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் தவறானது. அமித் ஷாவின் கருத்தை, மொழியின் பெயரில் ஒரு புதிய போர்க்களத்தை உருவாக்குவதற்கான சங்க பரிவாரின் அறிகுறிகளாக பார்க்க வேண்டும். தெற்கு மற்றும் வடகிழக்கு மக்கள் இந்தி பேசமாட்டார்கள், அவர்களிடையே பிரிவினைவாதத்தை உண்டாக்க அமித்ஷா முயற்சிக்கின்றாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தி நம் நாட்டை ஒன்றிணைக்கிறது என்ற கூற்று அபத்தமானது. அந்த மொழி பெரும்பான்மையான இந்தியர்களின் தாய்மொழி அல்ல. அவர்கள் மீது இந்தியை சுமத்துவதற்கான நடவடிக்கை அவர்களை அடிமைப்படுத்துவதற்கு சமமாகும். மத்திய அமைச்சரின் இந்த கருத்து, இந்தி பேசாத மற்ற மொழி பேசும் மக்களின் தாய்மொழிகளுக்கு எதிரான போர்க்குரல் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியை முதன்மை மொழியாக மாற்றுவதற்கான முயற்சிகள் அவர்களின் தாய்மொழியை மறுக்கும் முயற்சியாகும்' இந்தி புரியாத காரணத்தினால் தான் இந்தியர் இல்லை என்று எந்த இந்தியரும் உணரக்கூடாது. இந்தியா பல்வேறு மொழிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு தேசிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியிலிருந்தும் சங்க பரிவார் பின்வாங்க வேண்டும். முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை மாற்ற பயன்படும் இத்தகைய நகர்வுகளை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டும், என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்வீட்டர் பதிவில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். அமித் ஷா-வின் கருத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News