முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் தமிழில் வெளியான சுத்தரா ட்ராவல்ஸ் படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியில் பேருந்தில் இருக்கும் ஓட்டைகளை மறைக்க பேருந்து முழுவதும் இலை, தலைகளை வைத்து அலங்கரித்து இருப்பர். இதே போல ஒரு சம்பவம் தற்போது கேரளாவில் நடைபெற்றுள்ளது. கேரளா நெல்லிக்குழியில் இருந்து அடிமாலிக்கு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கேஎஸ்ஆர்டிசி அரசு பேருந்தை திருமண வீட்டார் வாடகைக்கு எடுத்துள்ளனர். திருமணத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்த இளைஞர்கள் திருமணதிற்கு அழைத்து செல்வதற்காக வந்த அரசு பேருந்தை சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் வருவது போலவே இலைகள், பெரிய மரக்கிளைகள், தென்னை ஓலைகளால் பேருந்தை அலங்கரித்துள்ளனர். அலங்கரிக்கப்பட்ட பேருந்தின் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆனது.
மேலும் படிக்க | நம்முடைய டிரஸ்ஸை கண்டுபிடிப்பது எப்படி? உலகிற்கே எடுத்து கூறிய அஸ்வின்!
வீடியோ மாநிலம் முழுவதும் வைரல் ஆனா நிலையில், இந்த பேருந்து சட்டத்தை மீறி இயக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பொதுவாகவே கேரளாவில் சட்டத்தை மீறும் சுற்றுலா பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து விதிகளை மீறி இது போன்ற விஷயங்களை கண்டிக்காத ஓட்டுநர் மீது கேரள மோட்டார் வாகனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் திருமண நிகழ்ச்சி முடிந்து திரும்பிய பேருந்தை பொதுமக்கள் சேவைக்கு அனுப்பாமல் கொத்தமங்கலம் கே.எஸ்.ஆர்.டி.சி பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஓட்டுநரை நேரில் ஆஜராகுமாறு, இணை ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கே.எஸ்.ஆர்.டி.சி., ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக இணை ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கார்த்திக்! 6 மணி நேரம் வாள்வீசி சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ