Heartbreaking! ஊரடங்கு கெடுபிடியால் தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்

கேரள அரசு புதன்கிழமை மூன்று காரணங்களுக்காக செல்லுபடியாகும் ஆவணங்களைக் கொண்டவர்களுக்கு ஊரடங்கு போது மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி வழங்கும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது

Last Updated : Apr 16, 2020, 11:31 AM IST
Heartbreaking! ஊரடங்கு கெடுபிடியால் தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன் title=

இந்தியாவில் லாக் டவுன் 2.0 க்குள் சில கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், துன்பம், பசி, நீண்ட பயணங்கள், காத்திருப்பு போன்ற புகைப்படங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிவருகின்றன. கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதனையடுத்து வேறு வழியில்லாததால், நடக்க முடியாத நிலையில் இருந்த 65 வயது நபரை, அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தே வீட்டிற்கு கொண்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

 

 

இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. 

Trending News