பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் இல்லை? ஏமாற்றத்தில் தமிழக மக்கள்!

Pongal Gift 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Dec 29, 2024, 06:28 AM IST
  • தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு.
  • பொங்கல் பரிசுத்தொகுப்பில் இருக்கப்போவது இதுதான்.
  • 1000 ரூபாய் கிடைக்குமா என்று எதிர்ப்பார்ப்பு!
பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் இல்லை? ஏமாற்றத்தில் தமிழக மக்கள்! title=

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் இந்த விழாவை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது இருந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து மக்களுக்கும் தமிழக அரசு சார்பில் பச்சரிசி, வெல்லம், கரும்பு கொண்ட பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த தொகுப்பில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இடம்பெற்றிருக்கும். வேஷ்டி சேலையுடன் கடந்த சில வருடங்களாக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் கிடைக்குமென்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை அரசு அளித்த வீட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்குமா? முக்கிய அப்டேட்

இந்நிலையில் 2025 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம் பெற்றிருக்கும் என்பதற்கான அரசாணை வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ வெல்லம் மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான விழாவாக பொங்கல் பண்டிகை உள்ளது. காலம் காலமாக பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஒரு அறுவடை திருவிழாவாகவும் மக்கள் இந்த பொங்கல் பண்டிகையை இயற்கைக்கு படைத்து வருகின்றனர். மேலும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு நாளாகவும் மக்கள் இந்த பொங்கலை கொண்டாடுகின்றனர். சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்பங்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசு சார்பில் 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு வழங்க இலவச வேஷ்டி மற்றும் சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனவரி 9ம் தேதி முதல் தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுகள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் பணம் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் இல்லை என்பதை தமிழக அரசு நேரடியாக அறிவிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | அண்ணா பல்கலை., வழக்கு: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News