குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘அழிக்க’ முடியாத சிறப்பு ‘MARKER PEN’

Presidential Polls: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக சிறப்பு வகை மார்க்கர் பேனா ஒன்று மத்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 18, 2022, 11:59 AM IST
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு ரூ.700.
  • வாக்குச் சீட்டில் சிறப்பு மார்க்கர் பேனாவை பயன்படுத்தி எம்.பி-க்கள்-சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
  • சிறப்பு வகை அழியாத மை கொண்டது இந்த பேனா.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படும் ‘அழிக்க’ முடியாத சிறப்பு ‘MARKER PEN’ title=

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக சிறப்பு வகை மார்க்கர் பேனா ஒன்று மத்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை ஊதா நிற மை கொண்ட இந்த பேனாவினால் குறிப்பிட வேண்டும். இந்த சிறப்பு பேனாவை கர்நாடகாவில் உள்ள மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் தயாரித்துள்ளது. ஒரு சிறப்பு வகை அழியாத மை கொண்டது இந்த பேனா, அதாவது, இந்த மையை அழிக்க முடியாது.

கர்நாடகாவில் உள்ள குறிப்பிட்ட நிறுவனம், கடந்த 54 ஆண்டுகளாக மத்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்களிக்கப் பயன்படுத்தப்படும் இந்த சிறப்பு மையை சப்ளை செய்து வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு ரூ.700. எம்எல்ஏ வாக்குகளின் மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். மாநிலத்தை பொறுத்தமட்டில் எம்.எல்.ஏ வாக்குகளின் மதிப்பு ரூ.151. ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்களின் வாக்குச்சீட்டுகளின் நிறம் பச்சை. எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் வாக்குச் சீட்டின் நிறம் இளஞ்சிவப்பு. இந்த வாக்குச் சீட்டில் இந்த சிறப்பு மார்க்கர் பேனாவை பயன்படுத்தி எம்.பி-க்கள்-சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

மேலும் படிக்க |  President of India: குடியரசுத் தலைவர் பெறும் சம்பளம் மற்றும் இதர வசதிகள் என்ன

இந்த சிறப்பு மார்க்கர் பேனா 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மார்க்கர் பேனாவை மத்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேனாவின் சிறப்பு என்னவென்றால், மை மிக நீண்ட நேரம் அழியாமல் இருக்கும். இதன் மை எளிதில் கெட்டுவிடாது. ஒரு பேனா மூலம் குறைந்தது 1000 முறை வாக்களிக்க முடியும். ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் விருப்பமான வேட்பாளருக்கு அடுத்ததாக வரிசை எண் எழுதப்பட வேண்டும். வரிசை எண்ணின்படி வாக்கு எண்ணிக்கையை அளிக்க வேண்டும். ஆனால் அது ரோமன் எழுத்துக்கள் அல்லது எண்களில் இருக்க வேண்டும். வாக்குச் சீட்டில் வார்த்தைகளை எழுத முடியாது. இந்த சிறப்பு மார்க்கர் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க வேண்டும். வேறு எந்த பேனாவையும் பயன்படுத்த முடியாது. வேறு பேனாவினால் வாக்களித்தால், அந்த வாக்கு ரத்து செய்யப்படும்.

மேலும் படிக்க |  நீண்ட கால குடியரசுத் தலைவர் முதல் போட்டியின்றித் தேர்வானவர் வரை - இந்தியக் குடியரசுத் தலைவர் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News