மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகளுக்கான முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
2017 தேர்தலில், காங்கிரஸ் 28 இடங்களிலும், பிஜேபி 21 இடங்களிலும் வென்றன. ஆனால் பிஜேபி NPP, NPF மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.
இந்தமுறை மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான என் பிரேன் சிங், சட்டமன்ற சபாநாயகர் ஒய் கேம்சந்த் சிங், துணை முதல்வரும் என்பிபி வேட்பாளருமான யும்னம் ஜாய்குமார் மற்றும் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் என் லோகேஷ் சிங் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்கள்.