மக்களவை தேர்தல் 2019 (லோக் சபா தேர்தல் 2019) முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 11) காலை ஏழு மணிக்கு தொடங்கியுள்ளது. இதில் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. களத்தில் மொத்தம் 1279 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலையங்களில் காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களிக்க வந்து;துள்ளனர்கள்.
நக்சலைட்டுகள் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் தொகுதியில் குண்டு வெடி தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்த்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்ப்படவில்லை. இந்த சம்பவம் ஃபராஸ் கான் காவல் நிலையத்திற்கு சொந்தமான பகுயில் நடந்துள்ளது என எஸ்பி உறுதிப்படுத்தி உள்ளார்.
மறுபுறத்தில், பீகாரில் ஔரங்காபாத் பாராளுமன்ற தொகுதிக்கு உற்பட்ட சிலியா பூத் எண் 9 அருகே IED வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. கயாவின் பொலிஸ் கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா இதை உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.