இந்தியாவில் காலகாலமாக வாக்குச்சீட்டு முறையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வாக்குச்சீட்டு முறை தவிர்க்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு முறை கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் எந்த தேர்தல் ஆனாலும் ஏறக்குறைய மின்னணு வாக்குப்பதிவு முறையே பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது தொடர்ந்து குற்றசாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவில் தேர்தல் நடந்து முடிந்தால், தோல்வி அடையும் கட்சி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்புவது வழக்கமாக கொண்டுள்ளது. இதுக்குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடப்பது உண்டு.
ஆனால் இந்த குற்றசாட்டுக்கள் அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. EVM இயந்திரத்தில் மோசடி எதுவும் செய்யமுடியாது. இந்த இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது எனக் கூறி குற்றசாட்டுகளுக்கு முற்றுபுள்ளி வைத்து வருகிறது.
இந்தநிலையில், நேற்று லண்டனில் செய்தியாளர் மாநாடு என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமெரிக்க வாழ் இந்தியரான சயத் சுஜா என்பவர், தேர்தலில் பயன்படுத்தப்படும் EVM-களில் முறைகேடு செய்யலாம் எனக்கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அதற்க்கான செயல் விளக்கம் செய்து காட்டினார். மேலும் அவர் EVM இயந்திரத்தை ஹேக் செய்யலாம். இதற்கு முன்பும் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் EVM மூலம் பற்றி ஒரு பெரிய சதித்திட்டம் நடந்து இருப்பதாக கூறினார், மக்களவை தேர்தல் வர உள்ளதால், இச்சம்பவம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
இதனையடுத்து, சயத் சுஜா என்பவரின் குற்றசாட்டை மறுத்த தேர்தல் ஆணையம். இதுக்குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளது தேர்தல் ஆணையம்.