இலங்கையின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் மகிந்த ராஜபக்ச....
இலங்கை அரசியலில் உச்ச கட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையின் 22 ஆவது பிரதமராக இன்று பதவியேற்றார் ராஜபக்சே. கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்ற நிலையில் பிரதமர் ராஜபக்சே அலுவலக பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார். ராஜபக்சே தலைமையிலான புதிய மந்திரிசபை சற்று நேரத்தில் பதவியேற்றுக்கொள்ளும் இன்று இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
சமீபத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில், நாடாளுமன்றத்தை வரும் 16 ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது இலங்கை புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் மகிந்த ராஜபக்ச. இதையடுத்து, இன்று பிரதமர் அலுவலக பொறுப்புகளை கவனிக்க தொடங்கினார்.
அதிபர் சிறிசேனா மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்போது, சிறிசேனாவுக்கு எதிராக சபாநாயகர் போர்க்கொடி உயர்த்தி இருப்பது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொழும்பு நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து கொழும்பு நகரிலும், நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் பலத்த பாதுகாப்பை ஏற்பாடு செய்துள்ளனர்.