உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், காஷ்மீர் வியாபாரிகளை தாக்கிய விவகாரத்தில் ஒருவன் காவல்துறையினரால் கைது கைதுசெய்யப்பட்டுள்ளார்!!
புல்வாமா தாக்குதலுக்குக்குப் பிறகு, காஷ்மீரை சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இத்தகைய செயல்கள் ஏற்புடையவை அல்ல என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மேலும் காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சாலையோரத்தில் உலர்பழங்களை விற்றுவந்த 2 காஷ்மீர் வியாபாரிகள் தாக்கப்பட்டனர்.
Man seen in viral video thrashing Kashmiri street vendors in Lucknow has been arrested by Police.More details awaited. pic.twitter.com/uHzlIAvPOX
— ANI UP (@ANINewsUP) March 7, 2019
பல ஆண்டுகளாக அங்கு வியாபாரம் செய்துவரும் அவர்களை உள்ளூரை சேர்ந்தவர்கள் தாக்குதலில் இருந்து மீட்டுள்ளனர். விஷ்வ இந்து தள் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவன் காஷ்மீரிகளை தாக்கிய வீடியோவை இணையத்திலும் பதிவேற்றியுள்ளான். அதில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதாலேயே தாக்குதவாக கூறுவதும் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.