மருத்துவர்கள் தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!!

மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து லட்சகணக்கான மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!!

Last Updated : Jun 14, 2019, 08:34 AM IST
மருத்துவர்கள் தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!! title=

மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து லட்சகணக்கான மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!!

மேங்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள NRS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயதான முகம்மது ஷாகித் என்ற நோயாளி கடந்த திங்கள்கிழமை உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள், மருத்துவர் ஒருவரை கடுமையாக தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரியும் கொல்கத்தா, மிட்னாபூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் கடந்த செவ்வாய்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், தில்லியில் உள்ள மருத்துவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 13) கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என தில்லி மருத்துவர் சங்கமும், இந்திய மருத்துவர்கள் சங்கமும் வேண்டுகோள் விடுத்திருந்தன. எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் வியாழக்கிழமை நெற்றியில் கருப்புப் பட்டை அணித்து பணிபுரிந்தனர். 

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தில்லி மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் கிரீஷ் தியாகி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில்; மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தில்லி மருத்துவர்கள் சங்கம் கண்டிக்கிறது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும், எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் சங்கமும் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இது குறித்து எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வேதனை அளிக்கிறது. தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அவர், பணிக்குத் திரும்பாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

 

Trending News