மும்பை: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உணவின் விஷத்தன்மை காரணமாக ஏற்பட்ட வயிற்று வலியால் காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மராட்டிய மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது மத்திய மந்திரி நிதின் கட்கரி, மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கோவா மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சந்தேஷ் சதாலே ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்று முதல்வர் பாரிக்கர் கோவா மாநில பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வதாக இருந்தது. அவரது உடல்நலக்குறைவு காரணமாக கோவா மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Prime Minister Narendra Modi arrives at #Mumbai's Lilavati Hospital and Research Centre to meet Goa Chief Minister Manohar Parrikar pic.twitter.com/j35xbHoUvC
— ANI (@ANI) February 18, 2018