இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினையின் போது காங்கிரஸ் தலைவர்களின் கவனக்குறைவாலே தற்போது கர்த்தார்பூர் பாக்கிஸ்தானில் உள்ளது என ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி தெரிவித்துள்ளார்!
200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் சட்டமன்ற தேரத்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக-வும், பாஜக-வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் கடும் போட்டியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆளும் பாஜக அரசின் சார்பாக ராஜஸ்தானின் ஹனுமான்கர்க் பகுதியில் பிரதமர் மோடி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சா கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்களாலே சீக்கியர்களின் புனித தளமனாக கர்த்தார்பூர் பாக்கிஸ்தானில் சென்றது. 1947-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்கள் கவனமாக செயல்பட்டிருந்தால் கர்த்தார்பூர் இந்தியாவில் இருந்திருக்கும் என குறிப்பிட்டார். .
சமீபத்தில் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பஞ்சாபில் உள்ள கர்த்தார்பூருக்கு இந்தியாவை சேர்ந்த சீக்கிய பக்கதர்கள் செல்ல இருநாட்டிற்கும் இடையில் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டது. இதன்படி இந்தியாவில் குடியிருக்கும் சீக்க மத பக்தர்கள் கர்த்தார்பூர்க்கு செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் தற்போது கர்த்தார்பூர் முக்கிய தலைப்பாக இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் பாஜக சார்பில் இன்று நடைப்பெற்ற பிரச்சார கூட்டத்தில் மோடி தெரிவிக்கையில்... கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏன் கர்த்தார்பூர் பிரச்சணை குறித்து சிந்திக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கவனமாக செயல்பட்டிருந்தால் கர்த்தார்ப்பூர் இந்தியாவில் இருந்திருக்கும். காங்கிரஸ் தலைவர்கள் செய்த தவறுகளை சரிசெய்வதையே பாஜக கடைமையாக கொண்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் தற்போதைய காங்கிரஸ் தலைமையும் தன் மூத்த தலைவர்களையே பின்பற்றி வருகின்றது என கடுமையாக சாடிய மோடி., அதேவேலையில் பாஜக தலைமை எளிமையானர்களுக்கான தலைமை எனவும் தெரிவித்துக்கொண்டார். மேலும் ராஜஸ்தானில் உள்ள ஒவ்வொரு சாதாரன மனிதனின் தேவை அறிந்து செயல்படுவே பாஜக அரசின் ஆட்சிமுறை எனவும் குறிப்பிட்டார்.