மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் 2024: விஐபி தொகுதிகளில் களம் காணும் முக்கிய புள்ளிகள்

Maharashtra Assembly Election: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி பார்த்தால், இந்த முறை 4,136 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 2019 இல் இந்த எண்ணிக்கை 3,239 ஆக இருந்தது. இந்த வேட்பாளர்களில் 2,086 பேர் சுயேச்சைகள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 20, 2024, 10:05 AM IST
  • மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் 2024.
  • தோராயமாக 9.7 கோடி வாக்காளர்கள் வாகளிக்கிறார்கள்.
  • இதில் 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர்.
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் 2024: விஐபி தொகுதிகளில் களம் காணும் முக்கிய புள்ளிகள் title=

Maharashtra Assembly Election: மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை அதாவது இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 1,00,186 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இம்முறை தோராயமாக 9.7 கோடி வாக்காளர்கள் வாகளிக்கிறார்கள். இதில் 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். 1.85 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 20.93 லட்சம் பேர் இந்த முறை முதல் முறையாக வாக்களிக்கிறார்கள். 

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி பார்த்தால், இந்த முறை 4,136 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 2019 இல் இந்த எண்ணிக்கை 3,239 ஆக இருந்தது. இந்த வேட்பாளர்களில் 2,086 பேர் சுயேச்சைகள். 

மகாராஷ்டிராவின் விஐபி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி இங்கே காணலாம்.

வொர்லி (மும்பை): சிவசேனா, எம்.என்.எஸ்.

இந்த முறை மும்பையின் வொர்லி சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் சிவசேனா (உத்தவ்) சிட்டிங் எம்எல்ஏ மீண்டும் களத்தில் உள்ளனர். சிவசேனா (ஷிண்டே) தரப்பில் மிலிந்த் தியோரா போட்டியிட்டார். இந்த தொகுதியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) சார்பில் சந்தீப் தேஷ்பாண்டே போட்டியிடுகிறார்.
ஆதித்யா தாக்கரே: 2019 ஆம் ஆண்டில் வொர்லியில் இருந்து பெரும் வெற்றியைப் பெற்ற ஆதித்யா தாக்கரே, கோவிட் -19 தொற்றுநோய்களின் போது தனது பணியின் மூலம் பெரும் புகழ் பெற்றார்.
மிலிந்த் தியோரா: UPA-2 அரசாங்கத்தில் முன்னாள் எம்.பி.யும் அமைச்சருமான தியோரா, நகர்ப்புற நடுத்தர வர்க்க வாக்காளர்களின் ஆதரவோடு தனது வெற்றியை உறுதிசெய்ய தன்னால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளார்.
சந்தீப் தேஷ்பாண்டே: எம்என்எஸ் வேட்பாளர் தேஷ்பாண்டே உள்ளூர் பிரச்சனைகள், குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி தொடர்பான பிரச்சனைகளை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுகிறார்.

பாராமதி: பவார் குடும்பத்தின் கோட்டை

பாராமதி தொகுதி பவார் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. ஆனால் இந்த முறை பவார் குடும்பத்திற்குள்ளேயே போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் அஜித் பவாரை எதிர்த்து சரத் பவாரின் பேரன் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். பொது மக்கள் சித்தப்பாவை தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது அண்ணன் மகவை தேர்ந்தெடுக்கிறார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அஜித் பவார்: 1991 முதல் தொடர்ந்து ஏழு முறை இந்த தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக இருந்த அஜித் பவார், பாராமதியில் வெல்ல முடியாதவராக கருதப்படுகிறார். 2019 இல், அவர் 83.24% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
யுகேந்திர பவார்: சரத் பவாரின் வழிகாட்டுதலின் கீழ் அரசியலில் நுழையும் அவரது பேரன் யுகேந்திரா, இளம் வாக்காளர்கள் மற்றும் குடும்ப செல்வாக்கின் பலனைப் பெறக்கூடும்.

பாந்த்ரா கிழக்கு (மும்பை): ஜீஷான் சித்திகி பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறக்கூடும்

காங்கிரஸில் இருந்து விலகி அஜித் பவாரின் கட்சியான என்சிபியில் இணைந்த ஜீஷன் சித்திகி, மும்பையின் பாந்த்ரா கிழக்கு பகுதியில் சிவசேனாவின் (உத்தவ்) வருண் சர்தேசாய்க்கு எதிராக போட்டியிடுகிறார். பாபா சித்திகி சமீபத்தில் கொல்லப்பட்டார். எனவே ஜீஷான் சித்திகி பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.
ஜீஷான் சித்திகி: இளைஞர்கள் மற்றும் முஸ்லீம் சமூகத்தினரிடையே பிரபலமான ஜீஷான், உள்ளூர் பிரச்சனைகளை எழுப்புவதிலும், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதற்கும் அறியப்படுகிறார். 
வருண் சர்தேசாய்: உத்தவ் தாக்கரேவின் மருமகன் வருண், சிவசேனாவின் (உத்தவ்), இந்த தேர்தலில் பாரம்பரிய வாக்கு வங்கியை தனக்குச் சாதகமாகப் பெற முயற்சிக்கிறார்.

மேலும் படிக்க | Live : ஏஆர் ரஹ்மான் விவகாரத்து, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

நாக்பூர் தென்மேற்கு: தேவேந்திர ஃபட்னாவிஸ் நான்காவது முறையாக களத்தில் உள்ளார்

துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியிடுகிறார். அவர் காங்கிரஸ் தலைவர் பிரபுல்லா குத்தேவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ்: 2009 முதல் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக இருந்த ஃபட்னாவிஸ், 2019ல் 49,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வளர்ச்சிப் பணிகள் மற்றும் பாஜகவின் வலுவான நிறுவன அடித்தளம் அவரது புகழின் அஸ்திவாரமாக உள்ளது. 
பிரஃபுல் குடாதே: காங்கிரஸின் பிரபுல் குடாதே உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை முன்னெடுத்து தேர்தல் களத்தில் இறங்கினார். பா.ஜ.க.வுக்கு எதிரான சூழலை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க இவர் முயற்சிக்கிறார்.

கோப்ரி-பச்பகடி (தானே): கேதார் டிகே, ஷிண்டேவின் குருவின் மருமகன்.

இந்த தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், மறைந்த சிவசேனா தலைவர் ஆனந்த் திகேவின் மருமகன் கேதார் திகேக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
ஏக்நாத் ஷிண்டே: தனது அரசியல் குருவான ஆனந்த் திகேயின் பெயரில் 'தரம்வீர்' என்ற மராத்தி திரைப்படத்தை தயாரித்துள்ள ஷிண்டே, இந்த இருக்கையில் தனது பிடியை வலுவாக்க தன்னாலான முயற்சிகளை எடுத்துள்ளார்.
கேதார் திகே: ஆனந்த் திகேயின் குடும்பம் மற்றும் உணர்ச்சிபூர்வமான தொடர்புகள் காரணமாக, உள்ளூர் மராத்தி வாக்காளர்களின் ஆதரவை கேதார் பெறக்கூடும்.

மேலும் படிக்க | விடிந்தால் வாக்குப்பதிவு... இப்போது கையும் களவுமாக சிக்கிய பாஜக பொதுச்செயலாளர் - ரூ.5 கோடி பறிமுதலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News