சீக்கிய குரு கோபிந்த் சிங் திரு உருவம் பொறித்த நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்......
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் மறைவுக்கு பின்னர் பலர் சீக்கிய மதத்தின் குருமார்களாக இருந்து சீக்கியர்களை வழிநடத்தி வருகின்றனர். அந்த வகையில் சீக்கிய மதத்தின் 10-வது சீக்கிய குருவான கோபிந்த் சிங் அவர்களை சிறப்பிக்கும் வகையில் அவரது நினைவு நாணயத்தை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவரது பிறந்தநாள் தற்போது கொண்டாடப்படும் நிலையில் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிடுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்.. பிரதமர் மோடி, அவரது இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், குரு கோபிந்த் சிங் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்ற உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற குரு கோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது குரு கோபிந்த் சிங் நினைவு தபால் தலையினை வெளியிட்டார்.
விழாவின் போது பேசிய அவர்., கல்சா பிரிவின் வாயிலாக குரு கோபிந்த் சிங், நாட்டை ஒருங்கிணைக்க மேற்கொண்ட தனித்துவமான முயற்சியை சுட்டிக் காட்டி உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இன்று சீக்கிய குரு கோபிந்த் சிங் திரு உருவம் பொறித்த நினைவு நாணயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
Delhi: Prime Minister Narendra Modi releases commemorative coin to mark birth anniversary of Guru Gobind Singh. Former Prime Minister Manmohan Singh also present. pic.twitter.com/CRTntukN9f
— ANI (@ANI) January 13, 2019