பா.ஜ.க. சார்பில் டெல்லி மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து இருந்தார். அவர் ஜூலை மாதம் தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். கட்சி மேலிடத்துடன் இவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது.
அதை தொடர்ந்து அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் புதிதாக ஒரு இயக்கத்தை தொடங்கினார். அதன் மூலம் பஞ்சாப் மாநில வளர்ச்சிக்கு பாடுபட போவதாக அறிவித்தார்.அதை தொடர்ந்து இன்று பா.ஜனதா கட்சியில் இருந்து விலகினார். அக்கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
சித்துவின் மனைவி நவ்ஜோத்கவுரும் பா.ஜனதா கட்சி சார்பில் அமிர்தசரஸ் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக இருந்தார். கணவர் சித்து பா.ஜனதாவில் இருந்து விலகியதை தொடர்ந்து அவரும் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த நவ்ஜோத் கவுர், சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடப்போவதாக அறிவித்து உள்ளார்.
I am an individual, I have only picked up issues of my zone. Not being allowed to do: Navjot Kaur Sidhu, BJP Punjab pic.twitter.com/06U74cYIpI
— ANI (@ANI_news) September 14, 2016