இந்தியக் கடற்படைக்கு சொந்தமான MiG 29k ரக ஜெட் விமானம் கோவா அருகே விபத்துக்குள்ளானது!!
டெல்லி: கோவாவில் ஞாயிற்றுக்கிழமை (பிப்., 23) இந்திய கடற்படை மிக் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று காலை 10.30 மணியளவில் கோவா கடற்கரையில் மிக் 29K விமானம் வழக்கமான பயிற்சி சோர்டியை நடத்தி வந்தது.
விமானத்தின் பைலட் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட இந்திய கடற்படை, “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
FLASH.
Today morning at around 1030h a Mig 29k aircraft on a routine training sortie crashed off Goa. The pilot of the aircraft ejected safely and has been recovered. An enquiry to investigate the incident has been ordered.@DefenceMinIndia @SpokespersonMoD— SpokespersonNavy (@indiannavy) February 23, 2020
இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள இந்திய கடற்படை, கோவா அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காலை 10.30 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையென்றும், விமானியும் பாராசூட் மூலம் குதித்து பாதுகாப்பான முறையில் உயிர்தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விபத்து குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கோவா அருகே கிராமப் பகுதியில் மற்றொரு MiG 29k ரக விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அடுத்த 3 மாதங்களில் தற்போது மீண்டும் விபத்து நிகழ்ந்துள்ளது.