பிரியங்கா காந்திக்கு செக் வைத்த தேசிய குழந்தைகள் ஆணையம்!

பிரச்சாரத்தில் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது போல் வீடியோ வெளியானதை அடுத்து பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

Last Updated : May 2, 2019, 11:35 PM IST
பிரியங்கா காந்திக்கு செக் வைத்த தேசிய குழந்தைகள் ஆணையம்! title=

பிரச்சாரத்தில் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது போல் வீடியோ வெளியானதை அடுத்து பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

உத்தர பிரதேச மாநில கிழக்கு மண்டல காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் பிரியங்கா காந்தி நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு 40 தொகுதிகளில் பிரச்சார பொருப்பாளராக உள்ளார். அந்த வகையில் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்திம் போது செல்லும் வழியில் பள்ளிச் சிறுவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பிரியங்காவை பார்த்து உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். பின்னர், காவலாளி ஒரு திருடன் என பொருள்படும் ‘சோக்கிதார் சோர் ஹே' என கத்தத் தொடங்கினர்.

சமீபத்தில் பிரதமர் மோடி காவல்காரன் என பொருள்படும் சோக்கிதார் பிரசாரத்தை தொடங்கிருந்தார். பாஜக தலைவர்கள் பலர் சமூக வலை தளங்களில் தங்களது பெயர்களுக்கு முன்பாக சோக்கிதார் என்பதை சேர்த்துக் கொண்டுள்ளனர்.

இந்த வகையில் சோக்கிதார் என்றாலே அது மோடியை குறிக்கும் வார்த்தையாகவே மாறிவிட்டது. இந்த நிலையில், சிறுவர்கள் மோடியை திருடன் திருடன் என கத்தியதைப் பார்த்து பிரியங்கா காந்தி வாயடைத்து நின்றார்.

பின்னர் சிறுவர்களிடம், 'நீங்கள் சொல்வது சரியானது அல்ல. நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்' என்று அறிவுரை வழங்கினார். இதையடுத்து ராகுல் காந்தி வாழ்க என பொருள்படும், ராகுல் காந்தி ஜிந்தாபாத் என சிறுவர்கள் கோஷம் எழுப்ப தொடங்கினர். 
இந்த வீடியோ இணையதில் உடனடியாக வைரலாக தொடங்கியது. இந்நிலையில் பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தியுடன் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது போல் வீடியோ வெளியானதை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நோட்டீஸ்  அனுப்பி உள்ளது.

Trending News