குடியரசுத் தலைவர் தேர்தல் : திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல்

Droupadi Murmu : குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக்  கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.  

Written by - Chithira Rekha | Last Updated : Jun 24, 2022, 01:37 PM IST
  • குடியரசுத் தலைவர் தேர்தல்
  • திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல்
  • யஷ்வந்த் சின்ஹா வரும் 27-ம் தேதி தனது வேட்புமனு
குடியரசுத் தலைவர் தேர்தல் : திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் title=

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, வரும் ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு, தனது வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்தனர்.

மேலும் படிக்க | திரௌபதி முர்முவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு

முன்னதாக நேற்று டெல்லி வந்த அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளக் கட்சிகள் தவிர்த்து, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் அவரது வெற்றி ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா வரும் 27-ம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளார். 

மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல் : நிதிஷ்குமாரின் ஆதரவு யாருக்கு?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News