NEET Exam: மார்ச் முதல் பயிற்சி தொடங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் முதல் மாணவர்களுக்கு தினந்தோறும் நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.

Last Updated : Feb 6, 2018, 08:37 AM IST
NEET Exam: மார்ச் முதல் பயிற்சி தொடங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்! title=

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் முதல் மாணவர்களுக்கு தினந்தோறும் நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.

மருத்துவ படிப்பிற்கான நீட் பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு வரும் மார்ச் முதல் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. அதன்படி பொது தேர்வுகள் முடிவடைந்ததும் தினசரி நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் அரசு பயிற்சி மையங்களில் நீட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் தேர்வுகள் மூலம் 2000 மாணவர்களை தேர்வு செய்து அனைவரையும் சென்னை அழைத்து வந்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Trending News