இனி இரயிலில் பெண் பயணிகளுக்கு புதிய சலுகை அறிமுகம்!

காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பெண் பயணிகளுக்கு ரயிலில் புதிய சலுகையை அறிமுகபடுத்தியுள்ளனர்.

Last Updated : Feb 27, 2018, 09:02 AM IST
இனி இரயிலில் பெண் பயணிகளுக்கு புதிய சலுகை அறிமுகம்! title=

படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு ரெயிலிலும் டிக்கெட் முன்பதிவின் போது பெண்கள், மூத்த குடிமக்களுக்கு என தனியாக படுக்கைகள் ஒதுக்கப்படுகின்றன.

அந்தவகையில் படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் தலா 6 கீழ் படுக்கைகள், 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் தலா 3 கீழ் படுக்கைகள், 45 மற்றும் அதற்கு மேல் வயதான பெண்கள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளுக்கு என வழங்கப்படுகின்றன.

ராஜ்தானி, துரந்தோ மற்றும் முழுவதும் குளிர்சாதன பெட்டி கொண்ட ரெயில்களில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் தலா 4 கீழ் படுக்கைகள் ஒதுக்கப்படும்.ரெயிலில் இருக்கை அட்டவணை தயார் செய்யப்படும் வரை இந்த படுக்கைகளை யாரும் உட்காராவிட்டால், பின்னர் அது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு (எந்த பாலினத்தவராக இருந்தாலும் சரி) ஒதுக்கப்படும். ஆனால் இந்த முறையில் ரெயில்வே மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி இருக்கை அட்டவணை தயாரிக்கும்போது இந்த சலுகை படுக்கைகள் காலியாக இருந்தால், அவை காத்திருப்போர் பட்டியலில் உள்ள பெண் பயணிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இதை அந்தந்த பெட்டியில் பணியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகரே ஒதுக்குவார் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Trending News