விரைவில் ரூ.1000 நோட்டுகளை வெளியிட மத்தியரசு முடிவெடுத்துள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் நாடு முழுவதும் பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார், அதன் பின்னர் புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது.
எனினும் மக்களிடையே பணம் பரிவர்தனைக்கான தட்டுபாடுகள் இன்னுமும் நிலவி வருகிறது. கிராமங்களில் மிக குறைந்த மதிப்பிலான பணம் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன, எனவே மக்கள் ரூ.2000 நோட்டுகள் கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளுதல் சற்று கடினமாகவே இருக்கிறது.
இத்தனை சரிசெய்யும் விதமாக புதிய ரூ.1000 நோட்டுகளை வெளியிட மதிய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ரூ.1000 நோட்டுகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது, கடந்த ஆண்டு பழைய நோட்டுகள் தடைசெய்யப்பட்ட பின்னர் தற்போது மீண்டும் புதிய ரூ.1000 நோட்டுகள் வெளியாக உள்ளது மக்களது வரவேற்ப்பை பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.