நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய பவன் குப்தா மனு தள்ளுபடி!

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!

Last Updated : Jan 20, 2020, 04:19 PM IST
நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய பவன் குப்தா மனு தள்ளுபடி! title=

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை கைதி பவன்குமார் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் 2012 ஆம் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால், 2 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த முகாமில் இருந்த பிறகு விடுதலை செய்யப்பட்டான். மற்றொருவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டில்லி கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு நீதிமன்றம் மற்றும் டெல்லி அரசு, மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி என அடுத்தடுத்து அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையிலடைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்கும், வருகிற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நால்வரில் ஒருவனான பவன்குமார் குப்தா, குற்றம்நடந்தபோது, தாம் 18 வயது பூர்த்தியாகாத சிறுவன் எனக் கூறி தாக்கல் செய்த முறையீட்டு மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதை எதிர்த்து தாக்கல் செய்த முறையீட்டு மனுவை, இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூசன், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு, மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

Trending News