கொரோனா காலத்திலும் அயராது உழைத்து சாதனை படைத்த அமைச்சகம் எது தெரியுமா?

கொரோனா காலத்தில் அனைத்துத் துறைகளும் வழக்கமான செயல்பாடுகளைச் செய்ய முடியாமல் காத்துக்கொண்டிருந்த நிலையில் இந்த அமைச்சகத்தில் மட்டும் ​​போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்தன.

Last Updated : Sep 6, 2020, 10:46 AM IST
  • கொரோனா காலத்தில் எல்லாம் ஸ்தம்பித்தன, அனைத்து பணிகளும் முடங்கின.
  • பொதுமுடக்கத்தை பயன்படுத்திக்கொண்டு இந்த அமைச்சகம் தன் பணிகளைச் செய்யத் தொடங்கியது.
  • ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், சாலைகள் அமைப்பதில் அமைச்சகம் புதிய சாதனை படைத்துள்ளது.
கொரோனா காலத்திலும் அயராது உழைத்து சாதனை படைத்த அமைச்சகம் எது தெரியுமா? title=

புதுடெல்லி: கொரோனா காலத்தில் எல்லாம் ஸ்தம்பித்தன. அனைத்து பணிகளும் முடங்கின. அனைத்துத் துறைகளும் வழக்கமான செயல்பாடுகளைச் செய்ய முடியாமல் காத்துக்கொண்டிருந்த நிலையில் இந்த அமைச்சகத்தில் மட்டும் ​​போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்தன. ஆம்!! அதுதான் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways).

வாகனங்கள் ஓடாத சாலைகள், மக்கள் நடமாட்டம் இல்லாத சாலைகள், யாரும் உபயோகிக்காத சாலைகள் என இப்படி ஒரு நிலை ஏற்படும் சாத்தியம் இதுவரை வந்ததில்லை. இனியும் வரவேண்டாம். ஆனாலும், இந்த நிலை வந்ததை பயன்படுத்திக்கொண்டு இந்த அமைச்சகம் தன் பணிகளைச் செய்யத் தொடங்கியது.

திட்டமிடப்பட்ட, தேவைப்படட் இடங்களில் சாலைகள் அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டது.

ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், சாலைகள் அமைப்பதில் அமைச்சகம் புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு சாலைகளை நிதின் கட்கரியின் (Nitin Gadkari) அமைச்சகம் அமைத்துள்ள நிலையில், நெடுஞ்சாலை (Highways) கட்டுமான பணிகளை முடிப்பதிலும் மூன்று ஆண்டு சாதனையை அமைச்சகம் முறியடித்தது.

உண்மையில், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 2771 கி.மீ நெடுஞ்சாலைகளை உருவாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இலக்கு வைத்திருந்தது. கொரோனா காலத்தின் பாதகமான சூழ்நிலையிலும், இலக்கை விட நானூறு கிலோமீட்டர் அதிகமாக, அதாவது 3181 கி.மீ தூர அளவிலான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. இதில், மாநில பொதுப்பணித் துறை (PWD) 2104 கி.மீ, என்.எச்.ஏ.ஐ 879 கி.மீ, என்.எச்.ஐ.டி.சி.எல் 198 கி.மீ நெடுஞ்சாலையை அமைத்தன.

ஆகஸ்ட் 2019 வரை, 1367 கி.மீ தேசிய நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் நடந்திருந்த நிலையில், இந்த முறை ஆகஸ்ட் 2020 க்குள் அது இரட்டிப்பாகி 3300 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.

கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, 31 ஆயிரம் கோடி ரூபாயில் 744 கி.மீ நெடுஞ்சாலைக்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிக அதிக அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News