GST செலுத்தாதவர்களை FIR இல்லாமல் கைது செய்யலாம்: SC

ஜிஎஸ்டி செலுத்தாதவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டாம் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது!!

Last Updated : May 30, 2019, 09:36 AM IST
GST செலுத்தாதவர்களை FIR இல்லாமல் கைது செய்யலாம்: SC title=

ஜிஎஸ்டி செலுத்தாதவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டாம் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது!!

GST வரி ஏய்ப்பு செய்தவரை கைது செய்யும் அதிகாரத்தை ஆய்வு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. GST வரி மோசடி செய்தவர்களை வரித்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் என மத்திய சரக்கு மற்றும் போக்குவரத்து வரி (E-GST) சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள்  போடப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், தெலுங்கானா உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்வோருக்கு எந்த ஒரு இடைக்கால நிவாரணமும் வழங்கக் கூடாது என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. ஆனால் GST அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் அல்ல, அவர்கள் கைது செய்வதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசின் வாதம் முன் வைக்கப்பட்டது.

எந்த ஒரு FIR-யும் பதிவாகவில்லை என்பதால் சில வழக்குகளை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து வரி ஏய்ப்பு செய்த வியாபாரிகளுக்கு முன் ஜாமீன் வழங்கியிருந்தது. GST ஆணையர்கள் வரி ஏய்ப்பாளர்களை எந்த வித வழக்குப் பதிவு செய்யாமலேயே கைது செய்யலாம் என்று தெலுங்கானா உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது.

 

Trending News