J&K அந்தஸ்து நீக்கம்: இன்று இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் - மெகபூபா

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 பிரிவு நீக்கம் குறித்து மெகபூபா முப்தி கண்டனம்!!

Last Updated : Aug 5, 2019, 01:06 PM IST
J&K அந்தஸ்து நீக்கம்: இன்று இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் - மெகபூபா title=

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 பிரிவு நீக்கம் குறித்து மெகபூபா முப்தி கண்டனம்!!

காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு படைகள் குவிப்பு, அமர்நாத் யாத்திரை ரத்து, சுற்றுலாப் பயணிகள் வெளியேற உத்தரவு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் வீட்டுக் காவலில் அடைப்பு, தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடையுத்தரவு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொபைல் இண்டர்நெட் சேவை துண்டிப்பு என காஷ்மீர் விவகாரத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ மற்றும் 370ஆவது பிரிவுகளை நீக்குதல், ஜம்மு-காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என பிரித்தல் போன்றவற்றிற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்படுவதாக, தகவல்கள் பரவின. ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்தார். இதன்படி, காஷ்மீருக்கு 1954ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும் என்றார். இதேபோல, லடாக் மக்களின் நீண்ட கால விருப்பத்தை ஏற்று, அப்பகுதி ஜம்மு-காஷ்மீரில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு, சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அமையும் என்றார்.

ஜம்மு-காஷ்மீரும் பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக அமையும் என அமித்ஷா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னரும், அறிவிப்புக்கு பின்னரும் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்கும் குடியரசுத் தலைவரின் அறிவிப்பாணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் 35A பிரிவும் முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்து இந்த முடிவிற்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 பிரிவு நீக்கம் குறித்து மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில்;  இன்றைய நாள் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம், 1947 ஆம் ஆண்டில் 2 தேசக் கோட்பாட்டை நிராகரிக்கவும், இந்தியாவுடன் இணங்கவும் ஜே & கே தலைமையின் முடிவு பின்வாங்கியது. பிரிவு 370 ஐ அகற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முடிவு சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது. 

இது இந்தியாவை J&K நிறுவனத்தில் ஒரு தொழில் சக்தியாக மாற்றும். இது துணைக் கண்டத்திற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். GOI-களின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன. J&K பிரதேசத்தை மக்களை அச்சுறுத்துவதன் மூலம் அவர்கள் விரும்புகிறார்கள். காஷ்மீர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்தியா தோல்வியுற்றது.

பாராளுமன்றத்தின்மீது நம்பிக்கை வைத்த எங்களைப் போன்றவர்கள், ஜனநாயகத்தின் கோயில் ஏமாற்றப்பட்டுள்ளது. J&K அரசியலமைப்பை நிராகரித்த ஐ.நா.வின் கீழ் தீர்மானத்தை கோரிய  J&K-ல் உள்ள கூறுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இது காஷ்மீரிகளின் உணர்வை அந்நியப்படுத்தும்' என அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News