LPG சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானிய முறையில் மாற்றம் என்ற போலியான தகவலுக்கு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது!
சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படும். சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்நிலையில், சமையல் எரிவாயுக்கான் மானியம் மாற்றப்பட்டுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது செயல்பாட்டில் உள்ள LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானியத்தை செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை மாற்றி, ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த முறைப்படி, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் திட்டத்தை அரசு பின்பற்ற இருப்பதாக அந்த ஊடகங்களில் செய்திகளில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவலால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்த செய்திகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், நேரடி மானியத் தொகை பரிமாற்ற முறையை மாற்றும் உத்தேசம் ஏதும் பெட்ரோலிய அமைச்சகத்திடம் இல்லை என்றும் தற்போது வழங்கப்படுவது போலவே வங்கி கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படும் என்று பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.