கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் ரெயில் டிக்கெட் வாங்கினால் சேவை கட்டணம் ரத்து-நாளை முதல்

Last Updated : May 31, 2016, 01:07 PM IST
கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் ரெயில் டிக்கெட் வாங்கினால் சேவை கட்டணம் ரத்து-நாளை முதல் title=

ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் இப்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட் வாங்கினால் ரூ.30 சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பலர் கார்டுகளுக்கு பதில் பணமாக கொடுத்தே டிக்கெட் வாங்கி வருகிறார்கள். இணையவழி சேவைகளை அதிகரிகச்செய்யும் நோக்கில் இந்த சேவை கட்டணத்தை ரத்து செய்ய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

இந்த திட்டம் நாளை புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. எனவே இனி முன்பதிவு மையங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் வாங்கினால் சேவை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இதன்முலம் நேரடியாக பணம் செலுத்தி ரயில் டிக்கெட் பெறுபவர்களின் எண்ணிக்கையை குறையும் என ரயில்வே அமைச்சக்த்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News