5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை?

அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் செய்து வரும் நிலையில் தற்போது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

Last Updated : Feb 26, 2018, 10:21 AM IST
5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை? title=

அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் செய்து வரும் நிலையில் தற்போது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

'பால் ஆதார்' என கூறப்படும் இந்த திட்டம் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீள நிறத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. இதனால் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி பயோ மெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. 

இந்த ஆதார் அட்டையை 5 வயது வரை பயன்படுத்தலாம். அந்தன்பின் பயோமெட்ரிக் தகவல்களை இணைக்க வேண்டும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. பால் ஆதாரை பெற்றோரின் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம்.

Trending News