மீண்டும் பழைய கலால் வரி கொள்கை; இனி அரசே மது விற்பனை செய்யும்

தற்போது புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு சில்லறை மது விற்பனையில் தனியாா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 1, 2022, 01:27 PM IST
மீண்டும் பழைய கலால் வரி கொள்கை; இனி அரசே மது விற்பனை செய்யும் title=

புது டெல்லி: இன்று (வியாழன்) முதல் தேசியத் தலைநகரில் பழைய கலால் கொள்கை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தனியார் விற்பனையாளர்கள் மதுபானக் கடைகள் நேற்றுடன் மூடப்பட்டன. இனி டெல்லி அரசாங்கமே மதுவிற்பனையை மேற்கொள்ளும். மேலும் தனியார் மது விற்பனை கடைகள், அரசு மது விற்பனை நிலையங்களால் மாற்றப்படும். தற்போது டெல்லி நகரில் 300 மதுபான கடைகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை கூறியுள்ளது. இந்த கடைகளில் சுமார் 240 மது கடைகள் முதல் நாளில் திறக்கப்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கலால் துறை நிர்வாகம் இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் 130 பிராண்டுகள் மற்றும் 230 வெளிநாட்டு பிராண்டுகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. செப்டம்பரில் ஒரு நாளைக்கு சுமார் 12 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படலாம் என்று கலால் துறை மதிப்பிட்டுள்ளது. எனவே 40 லட்சத்திற்கும் அதிகமான மதுபாட்டில்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மதுபானங்களுக்கான தேவை நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பாட்டில்களை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
பழைய கலால் கொள்கை 17 நவம்பர் 2021 வரை நடைமுறையில் இருந்தது. பின்னர் அது புதிய கொள்கையால் மாற்றப்பட்டது. இப்போது பழைய கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது மூலம் தனியார் ஒப்பந்தங்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்குகள் இனி கிடைக்காது. புதிய கலால் கொள்கையின்படி, டெல்லியில் சுமார் 468 மதுபானக் கடைகள் இயங்கி வந்தன. புதிய கலால் கொள்கை ஏப்ரல் 30 ஆம் தேதி முடிவடைந்ததை அடுத்து, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு சில்லறை மது விற்பனையில் தனியாா் உரிமதாரா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

மேலும் படிக்க: பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா?

டெல்லி அரசு ஜூலை மாதம் புதிய கலால் கொள்கையை திரும்பப் பெற முடிவு செய்து. அரசு நடத்தும் கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய உத்தரவிட்டது. இந்த முடிவை ஆளுநர் வி.கே. புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணைக்கு சக்சேனாவுக்கு பரிந்துரைத்ததை அடுத்து, டெல்லி அரசு புதிய கலால் கொள்கை கைவிட்டு, பழைய கலால் கொள்கை மீண்டும் டெல்லியில் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தலைமைச் செயலாளரின் அறிக்கையின் அடிப்படையில், 2021-22 கலால் கொள்கையை அமல்படுத்தியதில் விதி மீறல்கள் மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு லெப்டினன்ட் கவர்னர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். 

டெல்லி கலால் கொள்கை வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்த பின்னர், கடந்த மாதம் டெல்லி துணை முதல்வர் சிசோடியா மற்றும் இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரி ஆரவ் கோபி கிருஷ்ணாவின் அலுவலகம், வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது. அவருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கையையும் சிபிஐ வெளியிட்டுள்ளது. இதனையடுத்து துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்ட 13 பேர் மத்திய ஏஜென்சிகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. எதிர்கட்சிகள் குறிவைக்கப்படுகிறார்கள். பழிவாங்கும் செயலில் பாஜக ஈடுபடுகிறது என குற்றம்சாட்டி வருகின்றனர்.  

மேலும் படிக்க: அதிகார போதையில் இருக்கிறீர்கள் : கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News