நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது: பிரதமர் மோடி

ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..!

Updated: Jun 30, 2020, 06:22 PM IST
நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது: பிரதமர் மோடி

ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..!

'ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு' முறை விரைவில் நனவாகும் என்று பிரதமர் நரேந்திர மோடியா இன்று மக்களிடம் உரையாற்றும் போது அறிவித்தார். மேலும், "நாங்கள் அனைவரும் 'ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு' திட்டத்தை நாட்டில் தொடங்க தயாராக உள்ளோம், அதற்காக அரசாங்கம் தீவிரமாக செயல்படுகிறது. வேலை தேடி அல்லது பிற தேவைகளுக்காக மற்ற இடங்களுக்கு குடிபெயரும் ஏழை நாட்டு மக்களுக்கு இது உதவும் ”என்று பிரதமர் தேச மக்களிடம் உரையாற்றிய போது கூறினார்.

'ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு' அமைப்பு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நாட்டின் எந்தவொரு நியாய விலைக் கடையிலிருந்தும் உணவு தானியங்களைப் பெற உதவும். 2021 மார்ச் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரு தேசம், ஒரு ரேஷன் கார்டு’ முறையை தேசிய அளவில் வெளியிடுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக அறிவித்தார்.

'ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு' அமைப்பின் கீழ், ரேஷன் கார்டிற்கான நிலையான வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டை இரு மொழி வடிவத்தில் வழங்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்கள் உள்ளூர் மொழியிலும், ஆங்கிலம் அல்லது இந்தி மொழியிலும் குறிப்பிடப்படும். சுமார் 80 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானிய பொருட்கள் வரும் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும் எனவும், இதற்காக 90 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி இன்று (30 ஆம் தேதி) நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் தெரிவித்தார். 

இது குறித்து பிரதமர் கூரிய ஹைலைட்ஸ்.... 

  • கொரோனாவை எதிர்தது போராடும் சூழலில் மழை காலம் துவங்கிவிட்டது. மழை காலம் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
  • இந்தகாலத்தில் காய்ச்சல் , சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்போர் விகிதம் குறைவு. 
  • ஊரடங்கை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. பலர் பொறுப்பற்ற முறையில் இருந்ததை காண முடிந்தது. ஊரடங்கு தளர்வு காரணமாக பலர் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தனர்.
  • இந்தியா லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. ஊரடங்கு தளர்வு இருந்தாலும், முன்பை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
  • பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. நாம் செய்யும் சிறிய தவறுகள், மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும். 
  • சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறுவோர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மாஸ்க் அணியாமல் கொரோனா விதிமீறலுக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம்.
  • பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் நமது நாட்டில் ஒரே விதி தான். நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. ஏழைகளுக்காக ரூ.1.75 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வெறும் 3 மாதத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி பண உதவி அளிக்கப்பட்டுள்ளது. 9 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 18 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

READ | அச்சத்தின் உச்சக்கட்டமாக சீனாவில் தடை செய்யப்பட்டது இந்திய ஊடகங்களுக்கான அணுகல்

  • கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை ஏழை மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 5 மாதங்கள் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக கூடுதலாக ரூ.90 ஆயிரம் கோடி செலவாகும். 5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ கடலை பருப்பு வழங்கப்படும்.
  • பண்டிகைகள் அடுத்து வருவதால், கரீப் கல்யாண் திட்டம் நீட்டிக்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என அவர் கூறினார்.