இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை அனுப்புவதை பாக்., மறுக்கவில்லை: ஜெயசங்கர்!

இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் மறுக்கவில்லை என  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 17, 2019, 03:20 PM IST
இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை அனுப்புவதை பாக்., மறுக்கவில்லை: ஜெயசங்கர்! title=

இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் மறுக்கவில்லை என  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்!

புது டெல்லியுடன் நட்புறவை ஏற்படுத்துவதில் இஸ்லாமாபாத் தீவிரமாக இருந்தால், அது விரும்பிய குற்றவாளிகள் மற்றும் தாவூத் இப்ராஹிம் மற்றும் ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறுகையில்; இந்தியாவில், தேசியவாதம் என்பது ஒரு “நேர்மறையான சொல்”, இந்த தேசியவாதம் முஸ்லிம் சமூகத்துடன் பதட்டத்தை ஏற்படுத்தாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், இந்த தாக்குதல்களில் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றும் பொருட்டு பல்வேறு மறுதாக்குதலில் ஈடுபட்டு வந்தனர் இந்திய ராணுவத்தினர். இதனிடையில் கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், பாகிஸ்தானில் இன்னும் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகிறது என்ற திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். இந்திய உளவுத்துறை தகவலின்படி, பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட ஜெய்ஷ் இ முஹமது, லாஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் முகாம்கள் அமைத்திருப்பதோடு, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மன்ஷேரா, பெஷாவர், பவால்புர், லாகூர் போன்ற பகுதிகள் அவர்கள் நடமாட்டங்கள் தெரிவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு வகையான செயல்களில் ஈடுபட்ட வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய எல்லை பகுதியில் ஆயுதங்கள் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் இந்திய ராணுவத்தினர் அவர்களின் முயற்சிகளை முறியடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர். 

 

Trending News