பாக்., நிச்சயம் பதில் கூறியாக வேண்டும் - நிர்மலா சீதாராமன்!

ஜம்மு-வில் நடைப்பெற்ற அத்துமீறல் தாக்குதலுக்கு பாக்கிஸ்தான் நிச்சயம் பதில் கூறியாக வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மாலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்!

Last Updated : Feb 12, 2018, 09:12 PM IST
பாக்., நிச்சயம் பதில் கூறியாக வேண்டும் - நிர்மலா சீதாராமன்! title=

ஜம்மு-வில் நடைப்பெற்ற அத்துமீறல் தாக்குதலுக்கு பாக்கிஸ்தான் நிச்சயம் பதில் கூறியாக வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மாலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்!

ஜம்மு-காஷ்மிர் புறநகர்ப் பகுதியான கென்னியில், சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதனையடுத்து, சம்பவயிடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பொதுமக்களை வெளியேற்றிவிட்டு தாக்குதலை தொடங்கினர். 

சுமார் 27 மணிநேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற இச்சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் 5 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். 

அதேப்போல் ஸ்ரீநகர் CRBF படை வீரர்கள் முகாமில் இன்று காலை நடந்த அத்துமீறல் தாக்குதலில், ஒரு ராணுவ வீரர் பலியானார். இவ்விருதாக்குதல்களுக்கும் லஷ்கர் இ தாய்பா இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை ஜம்மு சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தாக்குதலில் இருந்து தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

இதனையடுத்து, அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தியுடன் ஆலோசணை நடத்தினார். இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் தெரிவிக்கையில்...

"பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் 4 பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், மூன்று பேர் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவரை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்த அத்துமீறல் தாக்குதலுக்கு பாக்கிஸ்தான் நிச்சயம் பதில் கூறியாக வேண்டும்" என தெரிவித்துள்ளார்!

Trending News