காஷ்மீரின் பூஞ்ச் செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு; 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைகோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 3, 2019, 07:03 PM IST
காஷ்மீரின் பூஞ்ச் செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு; 2 பேர் பலி title=

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இந்திய பொதுமக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொல்லப்பட்டனர். போர் நிறுத்தத்தை மீறி அண்டை நாடு மீண்டும் குடியிருப்பு தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பூஞ்சின் கிருஷ்ணநாகதி, பாலகோட், ஷாப்பூர், கிரானி மற்றும் மால்டி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.

பாதுகாப்பு வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, நவம்பர் மாதத்தில் கடுமையான பனிப்பொழிவுக்கு இடையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவ முயற்சித்த அனைத்து வழிகளையும் மூடியது. பாகிஸ்தான் இராணுவத்தில் இரு நாடுகளுக்கும் எல்லை பகுதியான ரஜோரி மற்றும் ஜம்முவின் பூஞ்ச் மாவட்டங்களின் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து பாக்கிஸ்தானிய தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சித்தது.

பாகிஸ்தான் இராணுவத்தின் இத்தகைய திட்டங்களை இராணுவம் முறியடித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பூஞ்ச் மாவட்டத்தின் அருகே உள்ள எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவி முயன்ற சதியை முறியடித்தது. அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, 2 பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் உட்பட பல பாகிஸ்தான் இராணுவ பதுங்கு குழிகளை இந்திய இராணுவ வீரர்கள் இடித்தனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பலத்த காயம் அடைந்தனர்.

Trending News