எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூடு

Last Updated : Sep 29, 2016, 12:46 PM IST
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூடு title=

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. சிறிய ரக குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரி தாக்குதலுக்கு பிறகு இரு முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்து மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News