இந்தியாவை ஒரு பிராண்டாக மாற்றிய மோடி... பிரதமர் மோடியை புகழும் பாக். ஊடகங்கள்!

பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஒருபுறம் கூறி வரும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தான் ஊடகங்கள் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2023, 03:51 PM IST
  • பாகிஸ்தான் செய்தித்தாளில், பிரதமர் மோடியின் பணிகளைப் புகழ்ந்து கட்டுரைகள் வெளியாகின்றன.
  • இந்தியாவை தனது பரந்த செல்வாக்கை பரப்பக்கூடிய உயரத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார்.
  • வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் இந்தியாவின் மேலாதிக்கம் அதிகரித்துள்ளது.
இந்தியாவை ஒரு பிராண்டாக மாற்றிய மோடி... பிரதமர் மோடியை புகழும் பாக். ஊடகங்கள்! title=

பாகிஸ்தான் மக்கள் உணவு பொருள் பற்றாக்குறையினால் அவதிப்படுகிறார்கள். பாகிஸ்தான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை அந்நாட்டு பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஷேபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். அதே நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள ஊடகங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. பாகிஸ்தான் செய்தித்தாளில், பிரதமர் மோடியின் பணிகளைப் புகழ்ந்து கட்டுரைகள் வெளியாகின்றன. இந்தியா தற்போது ஒரு சிறந்த தலைவரின் கையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

3 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ள ஜிடிபி

இந்தியாவையும், இந்தியப் பிரதமரையும் முதன்முறையாகப் புகழ்ந்து, இந்தியாவை தனது பரந்த செல்வாக்கை பரப்பக்கூடிய உயரத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார் என்று பாகிஸ்தான் செய்தித்தாள் ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ நாளிதழில் வெளியான கட்டுரையில், “பிரதமர் மோடியின் தலைமையால் தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மேம்பட்டுள்ளது மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி 3 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் வலுவாக உள்ள இந்தியா 

புகழ்பெற்ற அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஷாஜத் சௌத்ரி, இது ஒரு 'அபாரமான வளர்ச்சி' என்று கூறி, 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில்' எழுதினார்.  இந்த நேரத்தில் இந்தியா அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பிடித்த இடமாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தனது தனக்கான களத்தை நிலைநிறுத்தியுள்ளது, அதாவது மாறிவரும் காலத்திலும் கூட, உலக அளவில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது என்று அவர் கட்டுரையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உலக மன்றங்களில் இந்தியாவின் வரவேற்பு அதிகரித்துள்ளது. வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் இந்தியாவின் மேலாதிக்கம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | கோதுமை மாவிற்கு அடித்துக் கொள்ளும் மக்கள்! பாகிஸ்தானின் அவல நிலையை காட்டும் வீடியோ!

தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய மையமாக உள்ள இந்தியா

இந்தியா விவசாய பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய மையமாக உள்ளது. விவசாயத் துறையில், ஏக்கருக்கு இந்தியாவின் மகசூல் உலகிலேயே அதிக அளவாக உள்ளது என்றும், 1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், இந்தியா ஒப்பீட்டளவில் நிலையான, ஒத்திசைவான மற்றும் செயல்பாட்டு அரசியலைக் கொண்டுள்ளது என்றும் இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் சாதனை செய்த பிரதமர் மோடி

புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, ஷாஜாத் சவுத்ரி தனது கட்டுரையில், இந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கம் காலத்தின் சோதனையாக நிற்கிறது என்று கூறினார். 'இந்தியாவை ஒரு பிராண்டாக மாற்ற மோடி பல செயல்களைச் செய்துள்ளார், அவருக்கு முன் வேறு யாராலும் செய்ய முடியயாததை செய்துள்ளார். இந்தியா தனக்குப் பிடித்ததை, தனக்குத் தேவையானதைச் செய்கிறது என்பதுதான் சிறப்பு.

இம்ரான் கான் கூறிய கருத்து

நவம்பர் மாத தொடக்கத்தில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி, அது முற்றிலும் சுதந்திரமானது என்று வர்ணித்தார். ஏனெனில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவில் இந்தியா உறுதியாக உள்ளது.

பாகிஸ்தான் மேற்கு நாடுகளுக்கு அடிமை

அக்டோபர் 2022 இல் கூட, இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டினார், இந்தியா தனது விருப்பப்படி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க முடிந்தது, பாகிஸ்தான் மேற்கு நாடுகளுக்கு அடிமையாக இருந்தது, ஏனெனில் பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக அச்சமற்ற முடிவுகளை எடுக்க முடியவில்லை.

மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News